முடி உதிர்வை குறைக்க ஒரு ரகசியம்..!! குறிப்பு -1
முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இல்லை.., அதிலும் ஒரு சிலருக்கு அதிகமாக முடி கொட்டிக்கொண்டே இருக்கும். இதை தடுக்க சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
தயிர் தேன் மாஸ்க் : தேன் என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பொருள்.., இதில் இருக்கும் ஈரப்பதம் கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும். தலை மற்றும் உச்சந்தலையில் ஊட்டம் அளித்து முடிக்கு வலுவுற செய்கிறது. தயிருடன் தேன் கலந்து ஹேர் மாஸ்க்காக பயன் படுத்தினால் கூந்தல் உதிர்வை குறைத்து விடலாம்.
தயிர் தேன் ஹேர் மாஸ்க் எப்படி தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் 15 நிமிடம் தலையில் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது கூந்தல் உதிர்வு கட்டுக்குள் வரும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..