ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான; அஞ்சு டிப்ஸ் – குறிப்பு 19
புதினா : புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து.., அந்த தண்ணீரில் வாய் கொப்பிளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் தொண்டையில் உள்ள கிருமிகளையும் அகற்றி விடும்.
மருதம் பட்டை : மருதம் பட்டைய வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால்.., இதயம் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதயநோய் உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வில்வ இலை : வில்வ இலையை வெயிலில் காய வைத்து, அரைத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக்கொள்ளவும். பின் அதை வடிகட்டி புதினா சேர்த்து குடித்தால். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பெருஞ்சீரகம் : பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், செரிமானம் சீராகும். மேலும் போதைப்பழக்கம் உள்ளவர்கள்.., சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் அதில் இருந்து விடுபடலாம்.
ஓமம் : ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால்.., வயிற்று வலி சரியாகி விடும். மேலும் செரிமானத்தையும் சீராக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..