உடலின் கெட்ட கொழுப்பை கரைக்கும் உணவுகள்; குறிப்பு -1
நம் எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை சேர்த்துவிடும் இதனால் மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே சில ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொண்டால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
பசலைக்கீரை : வாரத்திற்கு ஒருமுறையாவது உடலில் பசலைகீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
எலும்பிச்சை : எலும்பிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உடலில் உள்ள ரத்த செல்களை சீராக இயக்கச்செய்யும். தோலின் மேல் உள்ள கொழுப்புகளையும் நீக்க உதவும்.
கீரின் டீ : கீரீன் டீயில் தெர்மோ ஜெனிசிஸ் அதிக அளவில் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடும். தினமும் காலை கீரின் டீ குடிப்பது, மிகவும் ஆரோக்கியமானது.
நட்ஸ் : தினமும் காலை நட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம், வைட்டமின் மற்றும் மினரல்ஸ்கள் அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். தினமும் காலை ஊறவைத்த பாதம், முந்திரி, உலர் திராட்சை, பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
முட்டை : தினமும் காலை ஒரு வேகவைத்த முட்டை எடுத்துக்கொள்வதன் மூலம், உடலுக்கு தேவையான வைட்டமின், புரோட்டீன் மற்றும் புரதச்சத்து கிடைக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சியா விதை : ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை கொண்டது. பசி உணர்வையும் கட்டுபடுத்தும் தன்மைகொண்டது.
காபி : அதிகம் காபி குடிப்பது பித்தம் என்று சொல்லுவார்கள், ஆனால் அதிகம் காபி குடிப்பதால், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். நாளொன்றுக்கு மூன்றுமுறை காபி குடிக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..