புகார் அளிக்க சென்ற பெண். காவலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம்..!!
சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதோடு மாணவர்களுக்கு ட்யூஷனும் எடுத்து வருகிறார்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு முறை புகார், அளிக்க சென்ற பொழுது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை தொடர்ந்து செல்போனுக்கு ஆபாசமாக படங்களை அனுப்புவதாகவும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், அந்த ஆய்வாளர் தன்னை தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட சொல்லுவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தால், ஆபாச புகைப்படங்கள் வருவதாகவும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் அளித்த பின், சில மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். இதன் பெயரில் ஆய்வாளரிடம் விசாரணை நடத்திய பொழுது, அந்த பெண்தான் என்னை தேடி, தேடி வந்து தொந்தரவு செய்கிறார்.
நான், அவர்களை பாலியல் வன்கொடுமை எல்லாம் செய்யவே இல்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். மற்றொரு எண்ணில் இருந்து நான் அவர்களிடம் ஆபாசமாக பேசினேன் என்று சொல்கிறார்கள்.
நான் சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளேன். அந்த பெண் அளித்த புகாரின் பெயரில், என்னிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த விசாரணை முடிவு பற்றி இன்னும் எதுவும் வெளிவராததால்.., நியாயம் யார் பக்கம் என்று நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.