இலியானா கர்ப்பத்திற்கு இவர்தான் காரணமா..?
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, நண்பன் படம் மூலம் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை “இலியானா” தமிழ் நடித்தது குறைவான படங்கள் என்றாலும் தெலுங்கில் இவரது படங்கள் ஏராளம்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை இலியானா கர்ப்பமாக இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.., இது குறித்து பலரும் பல கேள்விகள் எழுப்பிவந்தனர். ஆனால் இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று அவர் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்..,
ஆனால் அனைவரின் கேள்விக்கும் பதில் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்..
இந்நிலையில் காதலருடன் இருக்கும் பிளாக் அண்ட் வொய்ட் புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராமில் போஸ்ட் செய்து காதல் கணவர் குறித்தும்.., பிறக்க போகும் குழந்தை பற்றியும் சில அன்பு வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பது ஒரு “வரம்”, அந்த வரம் எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நான் மிகவும் அதிஷ்டம் மிக்கவள்.., இது ஒரு அழகான பயணம் இந்த பயணத்தில் நான் செல்வேன் என்று. நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை .
எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்பதை என்னால், வார்த்தைகளால் விவரிக்க முடியாது கடந்த சில வாரங்களாக நான் அளவற்ற மகிழ்ச்சியில் இருந்து வருகிறேன்.., விரைவில் நாம் சந்திக்கப் போகிறோம்.
சில நாட்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சோகம் கொடுக்கிறது, சில சமயம் கண்ணீர் அதை தொடர்ந்து வரும் குற்ற உணர்வு, என நடப்பவை எல்லாம் சோகம் கொடுக்கிறது. என் மனதிற்குள் ஒலிக்கும் குரல் அதிக மனஅழுத்தத்தை கொடுக்கிறது.
இதையெல்லாம் நினைத்து நான் அழாமல் இருக்கிறேன். என் கருவில் இருக்கும் என் உயிருக்கு நான் நன்றியுடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு நான் மிகவும் வலிமையானவளாக இருக்க வேண்டும். இதை கூட நான் சமாளிக்க முடியவில்லை என்றால், நான் என்ன அம்மா.
நான் அதிகம் நேசிப்பது என் கருவில் இருக்கும் என் உயிரை தான், எனக்கு அது மட்டும் போதும்.. வேறு எதுவும் தேவையில்லை என்று இன்ஸ்டா பக்கத்தில், இலியான பதிவிட்டுள்ளார்.
பின் காதல் கணவர் குறித்தும், ஒரு நாள் என்னிடமே இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டேன். அப்பொழுது எனக்கு துணைநின்றவர் அவர் மட்டும் தான், நான் மனதளவில் உடைந்த பொழுதெல்லாம் அவர் தான் துணை நின்றார். என் கண்ணீரை துடைத்தார்.
எப்பொழுதும் என்னை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். அன்பு எந்த அளவிற்கு கொடுத்து இருக்கிறாரோ அதே அளவிற்கு அரவணைப்பும் கொடுத்து இருக்கிறார்.. என்று அவரின் காதலன் பற்றியும் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.