நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி – சோகத்தில் ரசிகர்கள்..!!
செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரோஜா. சுயம்வரம், உன்னை கொடு என்னை கொடுத்தேன், சொன்னால் தான் காதலா, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, பொட்டு அம்மன் போன்ற ஏராளமான படங்களில் கதாநாயகியாகவும்.
காவலன், சகுனி, மாசாணி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஹிட் கொடுத்தவர். இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதல் திருமணம் செய்துகொண்ட இவர், அதன் பின்னும் பல படங்களில் நடித்து வந்தார்.
படங்களை தொடர்ந்து நடித்து வந்த ரோஜா, அரசியலிலும் களம் இறங்கினார். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக பொறுப்பில் இருப்பவர். அரசியலிலும் தீவிரமாக செயல் ஆற்றிவந்த ரோஜா, இன்று சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால்வலி மற்றும் கால்வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நாளையே அவர் வீடு திரும்பிவிடுவார். எனவே ஒரு சிலர் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ரோஜாவின் என கணவர் செல்வமணி கேட்டுக் கொண்டார்.