15 லட்சத்தில் நாட்டை வாங்கிய ராண்டி வில்லியமஸ்..?
எந்த நாட்டினராக இருந்தாலும் தனக்கென்று ஒரு தனி இல்லம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் வசிப்பதற்கு ஒரு சொந்த நாட்டையே உருவாக்கியுள்ளார். எல்லோரையும் ஆச்சரியத்தில் திரும்பி பார்க்க வைத்த அந்த மனிதர் பற்றி இதில் பார்க்கலாம்.
உலகம் முழுதும் எங்கும் பயணம் செய்யும் ஒரு அமெரிக்கர் ஒருவர் சொந்த நாட்டையே உருவாக்கியிருக்கிறார். அமெரிக்காவில் ஸ்லோஜம்ஸ்தான் என்ற நாடு உள்ளது. இந்த நாட்டை உருவாக்கியவர் ராண்டி வில்லியம்ஸ்.
காலிபோர்னியா பாலைவனத்தில் 11.07 ஏக்கர் காலி நிலத்தில் $19,000 அதாவது 15,66,920 க்கு வாங்கி தனக்கென்று ஒரு நாட்டை உருவாக்கி , டிசம்பர் 01 2021 அன்று தனி நாடக அறிவித்தார். அந்த நாட்டிற்கு ஸ்லோஜமஸ்தான் என்று பெயர் வைத்தார்.
தனக்கென்று ஒரு நாட்டை உருவாக்கியதால் “ஸ்லோஜோமஸ்தான் சுல்தான்” என்று அழைக்கப்பட்டார். டிசம்பர்1 2021 அன்று, மதியம் 12:26 மணியளவில் ஸ்லோஜ்மஸ்தான் அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்டார்.
பின் இவரின் நாட்டிற்கென்று தனி ஒரு கொடி, தேசியகீதம், மற்றும் பாஸ்போர்ட் உள்ளது. ஸ்லோஜ்மஸ்தான் நாட்டிற்கு குடியுரிமைக்காக 4500 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இவரின் இந்த வளர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இதுபோன்ற பல உண்மைகதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..