மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட நண்பன் கொலை.. சென்னையில் அதிர்ச்சி..!!
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (26), இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களிலும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இளைஞருக்கு சத்யா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.
லோகேஷின் நெருங்கிய நண்பரான பால்ராஜ் அவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.. அப்பொழுது லோகேஷின் மனைவி சத்தியாவிற்கும் பால்ராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது.
இந்த கள்ள காதல் பழக்கத்தால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர், அப்படி ஒருமுறை தனிமையில் இருந்த பொழுது கணவர் லோகேஷிடம் சிக்கி கொண்டுள்ளனர்.
ஆனால் லோகேஷ் இருவரையும் எச்சரித்துள்ளார். இதற்கு பயப்படாத பால்ராஜ் மற்றும் சத்யா தொடர்ந்து இதே தவறை செய்து வந்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த லோகேஷ் ஜூன் 7ம் தேதி இரவு, பால்ராஜ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்து பாலராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பால்ராஜ் உறவினர்கள், அவரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின் லோகேஷையும் கைது செய்துள்ளனர்.., தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பால்ராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.