கஞ்சாவால் பெண்ணை அரை நிர்வாணமாக்கிய ஆண்..!! திருவள்ளூரில் அதிர்ச்சி..!!
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 45 வயது பெண் ஒருவர் அரை நிர்வாணத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.., இதை கண்ட மக்கள் உடனே இரயில்வே காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
தகவலின் பெயரில் அங்கு வந்த காவலர்கள் அந்த பெண்ணை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணிடம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல தகவல்கள் வெளியானது..
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மங்கை அம்பத்தூரை சேர்ந்தவர், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று இரவு, இருவரும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சந்தித்துள்ளனர்..
பின் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.., அர்ஜுணன் கஞ்சா போதையில் இருந்ததால் மங்கையின் உடல் முழுவதையும் பிளேடால் கிழித்துள்ளார்.. அந்த கொடூர செயலை தாங்க முடியாத அந்த பெண் நிர்வாணத்துடன் பிளாட்பாரத்திற்கு வந்துள்ளார்.
பிளேடால் கிளிக்கப் பட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு.., மயங்கி விழுந்துள்ளார். புகாரின் பெயரில் அர்ஜுணனை காவலர்கள் தேடி வருகின்றனர்.