2 குழந்தையின் தாயுடன் தொடர்பு வைத்திருந்த 17 வயது சிறுவன் தற்கொலை..!!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள கிராமத்தில் 17வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 குழந்தைகள் இருக்கும் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் அது தகாத உறவாக மாறியுள்ளது. இந்த உறவு பற்றி தெரிந்ததும் சிறுவனின் பெற்றோர்கள்.., சிறுவனை கண்டித்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணை மறக்க முடியாத அந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றான்.
வயல் வேலைக்கு சென்று வந்து பெற்றோர் பார்த்த போது, சடலமாக கிடந்த மகனை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர்.. பின் காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட காவலர்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்தும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..