கிளை இல்லாத மரங்கள் எது தெரியுமா..?
இயற்கையாகவே அனைத்து மரங்களும் கிளைகளுடன் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஒரு சில மரங்கள் கிளை இன்றி வளர்ந்து இருக்கும். கிளையின்றி அவை வளருவதற்கான காரணம் ஏன் என்று தெரியுமா..?
பனை மற்றும் தென்னை மரங்கள் தான் கிளைகள் இன்றி காணப்படும். பனை, தென்னை மரத்தில் கிளைகள் இன்றி உயரம் உயரம் வளர கூடிய மரவகையை சேர்ந்தவை.
இந்த மரங்களின் தண்டு பகுதியில் “ஸ்கெலரன்கிமா” எனும் கார்டிகல் நாரிழைகள் காணப்படுகின்றன.
இவை எளிமையான திசுக்களை கொண்டிருக்கும். எனவே இந்த நாரிழைகள் நேரடியாக வளரும் தன்மையுடையவை.
இந்த வகை மரங்கள் மிக உயரமாக வளருவதால்.., மரத்தில் கிளைகள் வளர இவை அனுமதிப்பதில்லை. எனவே தான், பனை மற்றும் தென்னை மரங்களில் கிளைகள் இருப்பதில்லை.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..