உலக யோகா தினம் என்று தெரியுமா..? தெரிவோம் அறிவோம்-12
தினமும் யோகா செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு மனதிற்கும் அமைதியை கொடுக்கும். தினமும் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் கூடுவதுடன் என்றும் நாம் இளமையாக இருக்கவும் செய்யும்.
இப்படி நமக்கு பல விதமாக பயன் அளிக்கும் யோகா நாள் என்று தெரியுமா..? யோகாவின் முக்கிய துவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜூன் 21ம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா தினம் தனி ஒரு நாளாக கொண்டாட வேண்டும் என பலரும் வைத்த கோரிக்கையில், பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்று 2014ம் ஆண்டு ஐநா சபையில் உலக யோகா தினம் ஜூன் 21ம் நாளாக அறிவிக்கப்பட்டது.
“யோகம்” என்றால் ஒருங்கிணைத்தல் என்பது என்று பொருள். “ஆசனம்” என்றால் உடலை அமர்த்தும் நிலை என்று அர்த்தம். இவை இரண்டையும் இணைப்பதையே யோகாசனம் என்கிறோம். யோகாவில் பல்வேறு ஆசனங்கள் இருக்கின்றன.
குறைந்தது தினமும் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாவது யோகாசனம் செய்ய வேண்டும். தினமும் யோகா செய்தால். உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.. அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் கட்டாயம் யோகாசனம் செய்தால், மனஅழுத்தம் குறையும்.
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..