கொழுப்பை கரைக்க உதவும் இயற்கை உணவுகள்..!!
அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் சில தவறான உணவுகளால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்து விடுகிறது. அந்த கொழுப்புகளை கரைக்க சில வகையான உணவுகளை எடுத்துக் கொண்டாளே போதும்.
பசலைக்கீரை :
நார்ச்சத்து அதிகம் நிறைந்த பசலைக்கீரையை எடுத்துக் கொள்வதன் மூலம், பசியை குறைக்க உதவுகிறது.
எலும்பிச்சை :
எலும்பிச்சையில் வைட்டமின் சி, போன்ற நார்ச்சத்து மற்றும் தனிம ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ் உடல் செல்களை சீராக இயக்க உதவும்.
க்ரீன் டீ :
இதில் இருக்கும் தெர்மோஜெனிசிஸ் கொழுப்பை குறைக்க உதவும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ் நச்சுக்களை நீக்க உதவும்.
நட்ஸ் :
தினமும் முந்திரி, பாதம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ்கள் எடுத்துக் கொண்டால் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும்.
முட்டை :
முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன் மற்றும் அமிலங்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும்.
சியா விதைகள் :
சியா விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். மேலும் பசியை கட்டுப்படுத்தி, கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது.
காபி :
டீ, காபி எடுத்துக்கொள்வதால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
ஆரஞ்சுபழம் :
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஹைட்ராக்ஸிசிட்ரிக் உடலில் தேங்கும் சர்க்கரையை கொழுப்பாக மாறவிடாமல் தடுக்கும். தினமும் எடுத்துக்கொண்டால், உடல் எடையையும் குறைத்துவிடும்.
பிரக்கோலி :
வைட்டமின் ஏ, சி, மற்றும் கே நிறைந்த பிராக்கோலியில் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
தண்ணீர் விட்டான் கிழங்கு :
தண்ணீர் விட்டான் கிழங்கு எடுத்துக்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..