தீயில் உருகும் பிளாஸ்ட்டிக் ஏன்..? மரக்கட்டையில் உருகாமல் எரிகின்றன..? தெரிவோம் அறிவோம் – 15
கடந்த சில தினங்களாக சில அறிவியல் பூர்வமான தகவல்கள் பற்றி தெரிந்து வருகிறோம்.. அதில் இன்று நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது. தீயில் உருகும் பிளாஸ்ட்டிக் ஏன்..? மரக்கட்டையில் உருகாமல் எரிகின்றன..? என்பதை பற்றி தான்.
உலகில் தயாரிக்கப்படும் அனைத்தும் பொருள்களுக்கும் ஒவ்வொரு மூலக்கூறு இருக்கும். இந்த மூலக்கூறுகள் அனைத்தும் எளிய விசை அணுக்களால் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் உருக வேண்டும் என்றால்.., முதலில் அதை உருகு நிலை அளவிற்கு சூடு படுத்த வேண்டும்.
அப்பொழுது தான் அந்த பொருளின் மூலக்கூறு இணைத்து வைக்கப்பட்டு எளிய விசையானது உருக்கப்படுகிறது. இந்த மூலக்கூறு களுக்கு அதிக வெப்பம் கிடைக்கும் பொழுது அவை உருகி விடும். எனவே தான் பிளாஸ்டிக் பொருள்கள் தீயில் உருகுகின்றன..
ஆனால் மரக்கட்டையை தீயில் வைத்தால் அவை உருகாமல் காற்றில் எரியும். அது ஏன் தெரியுமா..?
மரக்கட்டையை தீயில் வைக்கும் பொழுது உருகுநிலையை அடையும் முன்பே காற்றில் உள்ள ஆக்சிஜன் அதனுடன் கலந்து எரிந்து விடும். எனவே தான் மரங்கள் உருகாமல் தீயில் ஏறிகின்றன..
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..