கடனை திருப்பி கொடுக்காததால் 11 வயது குழந்தையை தூக்கி சென்று நிதி நிறுவன ஊழியர்..!! புதுக்கோட்டையில் பரபரப்பு..!!
புதுக்கோட்டை அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதகாரணத்தினால் நிதி நிறுவன ஊழியர் 11 வயது பெண் குழந்தையை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது*
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே மருதூரைச் சேர்ந்த வனத்துராஜா என்ற கூலி தொழிலாளி கீரனூரில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் (முத்தூட்) கடந்த ஆண்டு 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
இந்த பணத்தை மாதம் 2500 ரூபாய் என்ற தவணை முறையில் மாதம்மாதம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகை 2500 கூலி தொழிலாளி வனத்து ராஜாவால் கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.
பணத்தை குறித்த காலத்தில் கட்ட முடியாத நிலையில்,பணம் வசூலிக்க நேற்று வனத்து ராஜாவின் வீட்டிற்கு வந்த நிதி நிறுவன ஊழியர் விக்னேஷ் என்பவர் சென்றுள்ளார். வீட்டில் வனத்துராஜா இல்லாத நிலையில் அவரது 11 வருவது வயது மகள் ஜனனியை நிதி நிறுவன அலுவலகத்திற்கு கடத்திச் சென்று பின்பு வனத்து ராஜாவை தொடர்பு கொண்டு கடன் தவணைத் தொகையை கட்டினால் அவரது மகளை விடுவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்து ராஜா இது குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவன ஊழியர் விக்னேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.