பெளணர்மி அன்று இந்த விரதம் இருந்து பாருங்கள்..!!
பெளணர்மி அன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். காலை, அல்லது மாலை கோவிலுக்கு சென்று வழிபட்டு கோவிலில் நடக்கப்படும் பூஜைகளில் கலந்து கொள்ளலாம்.
இந்த பெளணர்மி நாளில் பலருக்கு அன்னதானம் அளித்தாள் புண்ணியம் தருவது மட்டுமின்றி ஏழு தலைமுறைக்கும்.. சிறந்த பலன் கொடுக்கும்.
முக்கியமாக பெண்கள் அதாவது திருமணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்தால்.., நல்ல குணமுடைய கணவர் கிடைப்பார். திருமணம் ஆன பெண்கள் இந்த விரதம் இருந்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படும்.
வயதானவர்கள் இந்த விரதம் இருந்தால் குடும்பம் என்றும் ஒற்றுமையுடன் இருக்கும்.., மேலும் கடைசி காலத்தில் புண்ணியம் கிடைத்து இறந்த பின் சொர்க்கம் செல்லுவார்கள் என்றும் ஒரு ஐதீகம் இருக்கிறது.
பெளணர்மி விரதம் என்பது நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று மட்டும் அவசியமில்லை.., அசைவ உணவு சாப்பிடாமலும் விரதம் இருக்கலாம் என்றும் ஆன்மீக ஐதீகம் சொல்லப்படுகிறது.
குறிப்பாக வீட்டில் பெளணர்மி அன்று குத்து விளக்கு வைத்து விளக்கு பூஜை செய்யலாம்.., இந்த பூஜையில் ப்ரித்தியங்கா தேவி அம்மன் மந்திரம் சொல்லி வழிபட்டால்.., வீட்டில் இருட்கள் நீங்கி, தீய சக்திகள் விலகி விடும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..