தலைமறைவாகி இருந்த ஆருத்ரா நிறுவன தீபக் பிரசாத் நள்ளிரவில் கைது..!!
குறைந்த நாளில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து மக்களும் தினம் தினம் உழைப்பார்கள். அதை ஒரு சிலர் அவர்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளுவார்கள், ஒரு சிலர் மோசடி வழக்கிலும் ஈடுபடுவார்கள்.
அப்படி நிகழ்வாக நடந்த ஒரு சம்பவம் தான் ஆருத்ரா நிறுவனத்தின் மோசடி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆருத்ரா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிறுவனம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ளது. ஆருத்ரா கோல்டு நிறுவன தங்க நகைக் கடன் கொடுத்து வந்த நிலையில் புதிதாக ஆருத்ரா கோல்டு ட்ரேடிங் என்ற நிறுவனத்தை ஆரமித்துள்ளது.
இந்த நிறுவனம் தொடங்கப் பட்டதும் விளம்பரத்திற்காக, எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவிகதம் முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தரப்படும், என கூறியதால் பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இதற்காக பல இடங்களில் கிளைகள் திறந்து வைத்துள்ளனர்.., இவர்கள் கூறியதை நம்பிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். சில மாதங்களில் சொன்னபடி வட்டியை 10 முதல் 30 சதவிகித வட்டியை தந்துள்ளனர்.., இதை பார்த்து இன்னும் பலர் இதில் முதலீடு செய்துள்ளனர். சில மாதங்கள் கழித்து வட்டி வருவது நின்றுள்ளது. பொதுமக்கள் கிளைகளுக்கு சென்று வட்டி பற்றி விசாரித்த போது, இன்னும் சில நாட்களில் வந்து விடும் என சொல்லி இழுத்தடித்துள்ளனர்.
இதுவரை பொது மக்களிடம் இருந்து 2400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வட்டிகள் வரமால் போனதால், பொது மக்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். பணத்தை எடுப்பதற்கும் நிறுவனம் மறுத்துள்ளது. நாளடைவில் தான் பொது மக்களுக்கு அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என தெரிந்துள்ளது. பின் இந்த மோசடி குறித்து பொது மக்கள் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை பொருளாதார குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த ஆரமித்துள்ளனர். பின் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், 5 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சமீபத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2438 கோடி ரூபாய் தொடர்புடைய ஆருத்ரா கோல்டு லோன் மோசடி வழக்கில் 3000 பக்க குற்ற பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான “தீபக் பிரசாத்” என்பவர் கைது செய்யப்பட்டார்.
தீபக் பிரசாத் இத்தனை நாட்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பாஜக நிர்வாகிக்கும், நடிகர் சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, தமிழ்நாடு பாஜகவில் பொறுப்பை பெற முதலீட்டாளர்களின் பணத்தை பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் 22 கார்கள், 96 கோடி டெபாசிட், 103 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என அனைத்தையும் பொருளாதார குற்றப்பிரிவினர் முடக்கியுள்ளனர்.