உணவே மருந்து என்று சொல்வது ஏன் தெரியுமா..?
உணவே மருந்து என்று சொல்வது ஏன் தெரியுமா..?
ஆரோக்கியமான உணவு நம்மை எந்த அளவிற்கு உடலில் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறதோ அதே அளவிற்கு, நீண்ட ஆயுள் உடனும் வைத்துக் கொள்ளும். சில உணவே கூட நம் உடலில் உள்ள நோய்களை நீக்க மருந்தாக மாறிவிடுகிறது..,
மறு + உந்து = “மருந்து”
உடல் இயங்குவதற்கு தேவையான ‘உந்து’ சக்தி தான் உணவு.
தவறான உணவுகள், தவறான பழக்க வழக்கங்கள், மற்றும் விபத்துகளால்.., உடலில் ஏற்படும் கோளாறுகளால்.., உடல் இயங்க தடுமாறும் போது மாற்று அதாவது ‘மறு…’
உந்து சக்தி தேவைப்படுகிறது.
அதாவது உணவுக்கு மாற்றாக வீரியமிக்க உணவு..,
மறு உணவு தான்.., மறு உந்து = ‘மருந்து’
ஆகவே , உணவே மருந்து
வீரியம் மிக்க உந்து சக்திகள் தான்..,
உண்மையான மருந்து.
பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் தான்… உணவே மருந்து.
உடலின் கழிவுகளை நீக்கம் செய்வது பெரும் மருந்து.
உடற்பயிற்சி செய்வது தின மருந்து.
விரதம் இருப்பது குண மருந்து.
சிரித்து மகிழ்வது உற்சாக மருந்து
நல்ல சிரிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்தது, ஆனால் இது “சிறந்த மருந்து” என்பதன் ஒரு அம்சம் மட்டுமே. ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்கள் ஆயுளை நீடிப்பது மட்டுமல்லாமல், மேலும் உயிருடன் உணரவும் செய்கிறது.
தூக்கம்… ஆக்க மருந்து.
சூரியஒளி சிறந்த மருந்து.
நன்றியுடன், அன்புடன் வாழ்வது அருமருந்து.
நல்ல நண்பர்கள் நல்மருந்து.
மன சுத்தத்தினால் ஏற்படும் ‘மன அமைதி’ அகமருந்து.
தன்நம்பிக்கை ஒரு நித்ய மருந்து.
அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவது ‘கருணை’ எனும் உயரிய மருந்து.
“எண்ணம் போல் வாழ்வு” என்ற இயற்கையின் நியதி படி
நல்ல எண்ணங்கள் தான் நல்ல மருந்து.
மொத்ததில் இயற்கையுடன் இணைந்து.., இயல்பாய் வாழ்வதே நிறை மருந்து.
இதை ஏற்றுகொண்டு வாழ்பவர்களுக்கு.., தேவையில்லை ரசாயன (நச்சு) மருந்து
ஆகவே,
இயற்கையோடு இணைந்து சுவாசித்து நேசித்து வாழ்வோம் நன்றி
மேலும் இதுபோன்ற பல தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..