விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!! சீறி பாயும் மாடுகள்..!!
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன், ஸ்ரீ காந்தாரி அம்மன், ஸ்ரீமுனியசாமி திருக்கோவிலில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திருநெல்வேலி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 37 ஜோடி மாடுகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு சீறி பாய்ந்தன.
சிறிய மாட்டு வண்டிகளுக்கு வெற்றி இலக்காக 10 கிலோ மீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு வெற்றி இலக்காக 6 கிலோ மீட்டர் தூரமும் நிரணயிக்கப் பட்டுள்ளது.
இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிசக்தி ராமச்சந்திரன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் போட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை, குத்துவிளக்கு மற்றும் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முதலாவதாக நடைபெற்ற இந்த சிறிய மாட்டுவண்டி போட்டியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் 38 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன,
இரண்டாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தையத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அதில் 14 மாட்டு வண்டிகள் போட்டியிட்டன. மூன்றாவதாக பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி போட்டியில் முதலாவது இடம் பிடித்தவர் புதியம்புத்தூர் விஜயகுமார் தட்டி சென்றார். பெரிய மாட்டு வண்டிக்கான போட்டியில் கடுகு சந்தை மோகன் முதல் இடம் பிடித்தார். பூஞ்சிட்டு பந்தியத்தில் கயத்தாறு சரவணன் முதலாவது இடம் பிடித்தார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்ன மாரிமுத்து வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.