இந்தியாவின் முதல் AI செய்தி வாசிப்பாளர் லிசா..!!
ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், செயற்கை நுண்ணறிவு (AI ) தொழில் நுட்பம் மூலம் பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயற்கை தொழில் நுட்பத்திற்கு லிசா என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
கம்ப்யுட்டர், இன்டர்நெட் தாண்டி தற்போது உலகம் முழுவதும் செயற்கை தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்த AI தொழில் நுட்பத்தில் நாம் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக சாட்ஜிபிடி யும் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவில் நீதிமன்றங்களில் வழக்குகளை வாதாட AI ரோபோவை வழக்கறிஞ்சர்களுக்கா அறிமுகப் படுத்தப்பட்டது, அனைத்து துறைகளிலும் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கல்களை தீர்க்க பல ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசாவின் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான “ஓடிவி” நாட்டிலேயே முதல் முறையாக மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. அதற்காக தலைநகரான புவனேஸ்வரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
அதில் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவருக்கு லிசா என பெயர் வைக்கப்பட்டு “ஓடிவி” பிராந்திய அளவில் இலவச சேனலாக செயல்பட்டு வருகிறது.
ஓடிவி நிர்வாக இயங்குனர் லிசா குறித்து பேசியது :
தொலைக்காட்சியில் லிசா தான் முதல் பெண் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர். ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் ஆச்சரியப்படும் விஷயமாக இருந்தது, அதன் பின் காலம் மாறி தற்போது இன்டர்நெட் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. இன்டர்நெட்டில் மக்கள் அதிக நேரம் செலவிடுவதால் இதுபோன்ற மாற்றங்களை கருத்தில் வைத்து “ஓடிவி” சேனல் முதல் முறையாக பெண் மெய்நிகர் செய்தி வாசிப்பாளர் லிசாவை அறிமுகம் செய்துள்ளது.
ஒடிசாவில் 1997ம் ஆண்டு முதன் முதலாக சேனல் தொடங்கினோம்.., சேனல் தொடங்கும் பொழுதே எங்கள் இலக்கில் தெளிவாக இருந்தோம். 26 ஆண்டுகள் உழைப்பிற்கு பிறகு இன்று முதல் இடத்தில் இருக்கிறோம். அதன் அடுத்த வெற்றியாக மைல்கல்லை எட்டியுள்ளோம். லிசாவை அறிமுகம் செய்வதன் மூலம் இன்னும் பல சிகரங்களை தொட முடியும்.
தற்போது எங்கள் தொலைக்காட்சியில் பார்வையாளர்கள் மாறி உள்ளனர். அதிக பட்சமாக செய்திகள் வழங்குவதில் அவர்களுக்கு அதிகமான ஆர்வங்கள் இல்லை சில செய்திகள் வேறு கேள்விகளுக்கான பதில்களை அவர்கள் எதிர் பார்க்கின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் தற்போது ஓடிவி தொலைக்காட்சியில் லிசா அறிமுகமாகி இருக்கிறார்.
அதற்கு செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் எங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. என ஓடிவி நிர்வாகத்தின் இயக்குனர் ஜகி மன்கட் பாண்டா கூறினார்.
ஆங்கிலத்தில் பேசும் ஒடியா :
ஓடிவி-யின் டிஜிட்டல் வர்த்தக தலைவர் லிடிஷா மன்கட் பாண்டா கூறும் போது.., லிசாவை நாங்கள் அறிமுகம் செய்துள்ளது எங்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். கூகுள் கூட ஓடியா மொழியை ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்பதில்லை, எங்கள் குழுவினர் தீவிர முயற்சி செய்து லிசாவை கொண்டு வந்துள்ளோம். ஓடியா மொழியை லிசா சரளமாக பேச முடியவில்லை என்றாலும், கூகுளை விட சிறப்பாக பேசும். ஓடியா மட்டுமின்றி பல மொழிகளையும் பேசும் திறன் லிசாவிற்கு உண்டு.
ஆனால் முதற் கட்டமாக லிசா ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளை மட்டுமே பேசும் அமைப்பை கொண்டுள்ளது.