நினைத்த காரியத்தை ஜெயமாக்கும் நரசிம்மர்..! துளசி மாலையில் அர்ச்சனை செய்தால் நிகழும் அதிசயம்..!!
நரசிம்மரை நரசிம்ம மந்திரம் சொல்லி துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால்.., தடைபடும் அனைத்து காரியங்களும் விலகும், செய்யும் செயலில் வெற்றியை அள்ளி தருபவர் “ஸ்ரீ நரசிங்க பெருமாள்”. வழிபாடுகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு நாளில் வழிபடுவதும்.., அவர்களின் மந்திரம் சொல்லி வழிபடுவதும் சிறந்த பலன் கொடுக்கும்.
கடந்த சில தினங்களாக சில தெய்வ வழிபாடுகள் பற்றி பார்த்து வருகிறோம்.., அதில் இன்று நாம் பார்க்க இருப்பது “நரசிம்மர் வழிபாடு “. நரசிம்மருக்கு உரிய மந்திரமான “ஸ்ரீமந்திர ராஜபத ஸ்தோத்திரம் ” சொல்லி வழிபட வேண்டும்.
இந்த மந்திரம் சொல்லி வழிபாடுவதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என நீங்கள் நினைக்கலாம்..? அதை பற்றி சொல்லுகிறேன்..
நரசிம்மர் வழிபட்டால் காத்து, கருப்பு, பேய், பிசாசு.., எதுவும் நெருங்காது. முக்கியமாக ஒரு சிலர் வாழ்வில் நினைத்த செயல்கள் தடைபட்டு கொண்டிருக்கும். அதாவது வீடு வாங்கலாம் என்று நினைப்போம்.., நிலம் வாங்கும் செயலே தள்ளி கொண்டு போகும், அல்லது பத்திரதை பதிவு செய்யும் பொழுது கிரைய பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல்.., போகும். ஒரு சிலருக்கு திருமண தடை இருக்கும்.., மற்றும் தொழில் நஷ்டம் அடைவார்கள்.., தொழில் முன்னேற்றத்திற்காக எவ்வளவு தான் பல காரியங்கள் செய்தாலும் பண வரவு கிடைக்காமல் இருக்கும்.., இவர்கள் உட்பட பலரும் இது போன்று நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் தடை படுவதை நினைத்து வருந்துவதை விட்டு விட்டு.., நரசிம்மர் கோவிலுக்கு சென்று துளசி மாலை வைத்து வழிபடலாம்.., மனதில் உண்மையான நம்பிக்கையோடு வேண்டினால் மட்டுமே தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ஒரு முறை மட்டும் கோவிலுக்கு செல்லுவதை விட ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டுமே நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
நரசிம்மர் படம் அல்லது சிலையை இல்லத்தில் வைத்து வழிபடுவதை விட தொழில் செய்யும் இடத்தில் வைத்து துளசி மாலை இட்டு தீபம் ஏற்றி வழிபாட்டால்.., தொழில் முன்னேற்றம் அடையும்.., லாபமும் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.