1000 ரூபாய் உதவிதொகை யாருக்கு..? முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் 2022 ம் ஆண்டிற்கான இந்திய குடிமை பணிகளை தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 33 வெற்றியாளர்கள் வாழ்த்தி பேசியுள்ளார்.
மகளிர் உரிமை தொகை :
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம்.., உலகளவில் பாலின இடைவெளி அறிக்கையில் தரவரிசை படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127 வது இடத்தை பெற்றுள்ளது. என்பது கவலைக்குரிய ஒன்று. அதை நீக்க முயற்சித்து தான் இந்த திட்டதை திட்டமிட்டுள்ளோம்.
பொருளாதார அடிப்படியில் யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கேட்ட போது, ஆயிரம் ரூபாய் யாருக்கெல்லாம் அவசியமோ அவர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். திட்டத்தை இப்பொழுது அறிவித்து விட்டோம், செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து அதற்குரிய மகளிர் அனைவருக்கும் 1000 ரூபாய் வந்து விடும்.
சில ஆலோசனைகளை ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல் அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்னுடைய முழு கவனமும் இதில் மட்டுமே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் இதற்கான முழு பொறுப்பையும் ஒப்படைத்து விட்டேன். மாவட்ட ஆட்சியாகளும் அதில் இறங்கிவிட்டார்கள். இதனால் ஒவ்வொரு மாவட்ட மக்களும் பயன் அடைவார்கள்.
300யூனிட்டு க்கு கீழ் மின்சாரம் பயன் படுத்துவர்கள் பெரும்பாலும் கிராம மக்கள் தான்.., வருடத்திற்கு குறைவான சம்பளம் வாங்குபவர்களும் விவசாயிகள் மற்றும் ஏழை குடும்பத்தினர்.., இதனால் நிச்சயம் இவர்கள் பயன் அடைவார்கள் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை செல்ல வேண்டியவர்களுக்கு கட்டாயம் சென்று விடும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இதனை தொடர்ந்து..,
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் களுடன் சந்திப்பு :
இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும்.., முதலில் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.., தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல உங்களின் தந்தை இடத்தில் இருந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அகில இந்திய போட்டி தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது உங்களின் கடிமையான உழைப்பையும்.., விடா முயற்ச்சியையும் காண்பிக்கிறது. சாதாரணமாக யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.., லட்சம் கணக்காணோர் தேர்வில் பங்கேற்றாலும் அதில் ஒரு சிலரால் மட்டும் அதில் பங்கேற்க்க முடியும்.
ஐ.ஏ.ஏஸ் மற்றும் ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் பணிகள் என்பது உயர்ந்த அரசு பணிகள் என்பதை விட அதற்கென்று ஒரு பொறுப்பும் கடமைகளும் உள்ள ஒரு பதவி என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களின் முகங்களை பார்க்கும் பொழுது கிராம புறங்களில் இருப்பவர்களை போல் தெரிகிறது. உங்களில் குடும்பத்தின் முதல் பட்டதாரி நீங்கள் தான், நீங்கள் சிறந்த பட்டதாரியாக இருந்தால் மட்டும் போதாது நீங்கள் பட்டம் வாங்குவதற்கு காரணமாக இருந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள் மட்டும் தான்.., எனவே அவர்களையும்.., அவர்கள் உங்களுக்காக செய்த தியாகங்கள் மற்றும் கொடுத்த பெயர் மற்றும் புகழை மறந்து விட கூடாது.
இந்திய நாட்டின் எளிய மக்கள் குறிப்பாக கிராமமக்கள் வாழ்வானது, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களில் மேம்பட வேண்டும். உலக நாடுகளின் இந்தியா மிக முக்கியமான ஒன்று. நாளை நீங்கள் இந்தியாவிற்காக பணியாற்ற போகிறீர்கள் என நினைத்து செயல்பட வேண்டும் என பேசினார்.