அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. இன்றைய நிலவரம்!
ஆடி மாதம் என்றாலே தங்கம் விலை குறையும் என்று சொல்லுவார்கள், அல்லது ஆஃப்பர் ஆவது கிடைக்கும். ஆனால் அதற்கு நேர் மாறாக தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை இருக்கிறது
கடந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, தற்போது திடீரென அதிரடியாக உயர்ந்தது.., எனவே நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்..
இன்றைய பங்கு சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,550 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 11ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 4546 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 88ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 36,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 81.40 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 81,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.