எனக்கு அதிகாரமும் இல்லை வேலையும் இல்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!!
புதிய தொழில் முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 245 தொழில் முனைவோர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொழில் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து கருத்து கேட்டறிந்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தோல்வியை கண்டு பயப்படக் கூடாது, நான் பலமுறை தோல்வியை சந்தித்தவன் என்று கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு தொழில் முனைவோரும் இந்திய நாட்டின் சொத்துக்கள், என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் பல திறமை சாலிகள் இருக்கின்றனர், இந்தியாவின் திறமையாளர்களால் தான் வெளிநாட்டினர் பயன் அடைந்து விடுகிறார்கள் என கூறியிருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்காக நான் எதையும் செய்வேன்.., அதை தடுக்கும் அனைவரும் என் எதிரிகள், ஆளுநர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்று சொல்லுவார்கள், ஆனால் எனக்கு எந்த வேலையும் இல்லை எந்த அதிகாரமும் இல்லை என பேசியுள்ளார்.
இவர் பேசிய அந்த சொல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிலர் மணிப்பூர் கலவரம் குறித்து ஆளுநர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமலும்.., அது பற்றி பேசாமல் இருப்பதும் ஏன் என தெரியவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.