இந்திய இளைஞர்களின் கனவு நாயகன் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு நாள்..!!
காணும் கனவுகளை கனவாக மட்டும் களைத்து விடாமல் அந்த கனவை நினைவாக்குங்கள்.., உங்கள் கனவை லட்சிய பாதைக்கு கொண்டு செல்லுங்கள் “லட்சிய கனவு காணுங்கள்” என மாணவர்களுக்கு எடுத்து உரைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் “ஏ.பி.ஜே. அப்துல்கலாம்” அவர்களின் நினைவு நாள் இன்று.
கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் கனவு நயாகனாக இன்று வரை இருக்கும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று துக்கநாளாக அனுசரிக்கப் பட்டுள்ளது.
இன்றைய நாளில் அவரை நினைத்து இரண்டு நிமிடம் கண்களை மூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தலாமே.., இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மற்றும் மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வரலாறு :-
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் பள்ளி படிப்பை தொடர்ந்தார், பள்ளிக்காலத்திலேயே குடும்ப சூழலை மனதில் கொண்டு வேலையிலும் படிப்பிலும் ஆர்வத்தோடு படித்து வந்தார்.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்தார், 1955ம் ஆண்டு சென்னையில் உள்ள எம்.ஐ.டி யில் விண்வெளி பொறியியல் படிப்பை முடித்தார் பின்னே அங்கேயே முதுகலை பட்டமும் படித்தார்.
படிப்பை முடித்த பின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனத்திலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். இந்திய விண்வெளி துறையின் மைல் கல்லாக இருந்த அக்னி-1 திட்டத்தை செயல்படுத்தினார் ஏ.பி.ஜே அப்துல்கலாம்.
1992 முதல் 1999 வரை பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.., 1999ம் ஆண்டு நடந்த பொக்ரான்-2 என்ற அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தார் ஏ.பி.ஜே அப்துல்கலாம், அந்த ஆண்டு அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டார்.
வானியல் விஞ்ஞானத்தில் இவரின் திறமைகளை பார்த்து அவரை கெளரவிக்கும் வகையில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஐந்து ஏவுகணை திட்டங்களிலும் பணிபுரிந்த அவர் 2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார்.
இந்தியாவிற்கு பெருமையாக திகழ்ந்த ஏ.பி.ஜே அப்துல்கலாம் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் முன் உரையாடி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவரின் உடல் அன்னாரின் சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வாழும் வரை இந்திய நாட்டை வல்லரசு நாடக மாற்ற வேண்டும் என நினைத்தவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஐயா அவர்கள் மட்டுமே..