6-12 மாத குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உணவுகள்..!!
குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.., குழந்தைகளுக்கு சரியான சமையத்தில் நாம் கொடுக்கும் உணவுகள் தான் அவர்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
உணவு பட்டியல் :-
தானியங்கள் 45 கிராம்,
பருப்புவைகள் 15 கிராம்,
பால் 500 மிலி,
கிழங்குகள் 50 கிராம்,
கீரைகள் 25 கிராம்,
காய்கறிகள் 25 கிராம்,
பழங்கள் 100 கிராம்,
சர்க்கரை 25 கிராம்.
குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.., குழந்தைக்கு ஆறு மாதம் ஆன பின் தான் ஆரோக்கியமான உணவுகள் தர தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் குழந்தைக்கு ஒவ்வொரு வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட உணவு பட்டியலை ஆறு மாதம் முதல் 8 மாதம் வரை நன்கு ஜூஸாக ஆக்கி கொடுக்க வேண்டும்..,
8 மாதம் முதல் 10 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
10 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிக்கன் மற்றும் மீன் என எந்த அசைவ உணவும் கொடுக்க கூடாது.
10 வது மாதத்தில் இருந்து அசைவ உணவுகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் அதுவும் நன்கு மசித்து கொடுக்க வேண்டும். எண்ணையில் பொறித்த சிக்கன், மீன், மட்டன் என எதுவும் கொடுக்க கூடாது.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திங்கள்