கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பட்டாசு குடோனில் வெடி விபத்து..! ஏராளமானோர் உயிர் இழப்பு..!!
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏறபட்ட பயங்கர வெடி விபத்தில் 4க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளது. இந்நிலையில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கிடுகிடுவென பற்றிய தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னரே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டையில் உள்ள பிரபலமான பட்டாசு குடோன் ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வெடி விபத்தில் ஏற்றப்பட்ட சத்தத்தின் மூலம் அங்கிருந்த வீடுகள் இடிந்து தரை மட்டம் ஆகியுள்ளது.
மேலும் வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் உயிர் இழந்துள்ளனர். வெடித்த பட்டாசுகளில் ஏற்பட்ட தீயில் குடோனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 7 பேர் உயிர் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர், இது குறித்து தீயணைப்பு துறைக்கும் ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின்னரே தீயை அணைத்துள்ளனர், மேலும் அதில் மீட்கப்பட்ட 10 பேரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சேர்க்கப்பட்ட அனைவரும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இந்த செய்தி சற்றுமுன் நம் மதிமுகத்திற்கு கிடைத்துள்ளது.., மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.