ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர் .
ஆற்காடு அடுத்த மேல்விஷராம் ஹாஜிப்பேட்டை அம்சா நகர் பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷா என்பவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இரண்டாவது பிரவசத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்நிலையில் அதேபகுதியில் வசிக்கும் சலீம்பாஷாவின் உறவினரான 14 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இதைப்பற்றி வெளியில் சொல்லகூடாது எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதில், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுமி அளித்த தகவலில் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ வழக்கில் கீழ் சலீம் பாஷாவை கைது செய்து, மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.