வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் 19 வயது என கூறி கரு கலைக்க அனுமதித்த 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையில் இருந்த தனியார் மருத்துவர் கைது செய்து மருத்துவமனையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்திரா நகர் பகுதியில் ஜெகதீசன் செல்வாம்பாள் மகள் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு பாட்டப்பன்கோவில் முன்பு விபத்தில் ஜெகதீசன் இறந்துவிட்டார்,
ஐஸ்வர்யா +2 படித்து முடித்துவிட்டு வீட்டில் தாயுடன் இருந்து வந்துள்ளனர்.திருமணமாகத நிலையில் ஐஸ்வர்யா கர்பமாகியதாக கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சுமார் ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தனது தாயிடம் மகள் கூறியுள்ளார்.
இதனை கேட்டதாய் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் வாழப்பாடியில் மூன்று தனியார் மருத்துவமனைகளில் குழந்தையை கருக்களைக்க கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நிஹாரிக்கா மருத்துவமனையில் செல்வாம்பாள் ராஜ்குமார் என்ற மருத்துவரிடம் அனுகி அவரின் காலில் விழுந்து சிறுமி 19 வயது எனக் கூறி தாயார் கதறி அழுது கருக்கலைக்க வேண்டியதாகவும்,பின்பு மருத்துவமனையில் அனுமதித்து குழந்தை பிறந்த நிலையில் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த மருத்துவர் செல்வாம்பாள் உடனே சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்க ஆவணம் மூலம் பரிந்துரை செய்து அனுப்பியுள்ளார்.
ஆனால் உறவினர்கள் அங்கிருந்துசேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லாமல் அருகே உள்ளமற்றொரு தனியார்மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்,
அங்கும் சிகிச்சைக்கு முடியாத நிலையில் பின்னர் அங்கிருந்த சேலம் அம்மாபேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,
கடைசியாக சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து குழந்தை பிறந்து பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழள்ளது,
இது குறித்து எழுந்த புகாரின் பேரில் வாழப்பாடி தனியார் மருத்துவமனை மகப் பேரு மருத்துவர் செல்வம்பாளை வாழப்பாடி போலீஸார் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரும் விசாரணையில் ஈடுபட்டனர் .
மேலும் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தையை மீட்டு சேலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது..
போலீஸார் சந்தேக மரணம் என்று வாழப்பாடி போலீஸார் வழக்கு பதிவு செய்து வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையில், வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர், அனைத்து மகளிர் காவல்நிலய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்,
அப்போது படிப்புச்சான்று மூலமாக இறந்த ஐஸ்வர்யா 17.8 மாதம் ஆகிறது என்றும், சிறுமி என்றும் தெரியவந்தது,
கற்பத்திற்கு காரமாக இருந்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா உடல்கூறு ஆய்வுக்குப் பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வாழப்பாடிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்,
மேலும் சம்பவம் நடந்த இரண்டாவது நாளான கடந்த 8-ம் தேதி காலை 11 மணியளவில் சேலம் இணை இயக்குனர் பானுமதி, துணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரச மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி, உள்பட அரசு மோகன்குமாரமங்களம் மருத்துவ குழுவினர் 8 பேர் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து கொடுத்த நிலையில் அன்று இரவு 9 மணியளவில் வாழப்பாடி போலீஸார் தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை விசாரணைக்கு அழைத்த போது மருத்துவமனையில் மயங்கி விழுந்த மருத்துவர் செல்வாம்பாள்ராஜ்குமார் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சுகர், பிரசர் அதிகம் உள்ளதால் பின்னர் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர் ,
அங்கு சிகிச்சையில் இருந்த மகப்பேறு மருத்துவர் செல்வம்பாள் பத்தாம் தேதி இரவு மருத்துவமனையில் வைத்து கைது செய்து மருத்துவமனையில் இருந்தவாறு போலீஸ் காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.