மந்திரவாதியால், 19 வயது இளம்பெண் உடலில் 77 ஊசி..! பின்னணியில் வெளிவந்த பகீர்..!
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரேஷ்மா பெஹாரா என்ற 19 வயதான இளம் பெண் ஒருவருக்கு அடிக்கடி உடலில் பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இவருடைய தாயார் உயிரிழந்த பிறகு தான் அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்கள் மந்திரவாதி ஒருவரை சந்தித்ததாகவும் அதன்பிறகு சில காலம் எந்த பிரச்சினைம் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் ரேஷ்மா தலைக்குள் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு முதற்கட்டமாக அவருடைய தலையில் இருந்து 8 ஊசிகள் அகற்ற பட்டன. இருப்பினும் அவருக்கு தலைவலி பிரச்சனை தீரதமால் எந்தவித மாற்றமும் இல்லாததால் அதிக வலியால் அவதிப்பட்ட ரேஷ்மாவை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, அவருக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மொத்தமாக 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நலமோடு இருப்பதாக கூறப்படுகிறது. தகவறிந்து வந்த போலீசார் ரேஷ்மாவிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மந்திரவாதி ஒருவரால் தனது மண்டை ஓட்டில் 77 ஊசிகள் குத்தப் பட்டதாக கூறியுள்ளார். மேலும் சிகிச்சை வழங்குவதாகக் கூறி மந்திரவாதி ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று மண்டை ஓட்டில் ஊசிகளைச் செருகியிருக்கலாம் என ரேஷ்மாவின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதியை கைது செய்து அவரிடம் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்