அடையாள தெரியாத வாகனம் மோதியதில் 2 வயது புள்ளிமான்க்கு நேர்ந்த கொடூரம்..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கட்டையன்குடி காடு கிராமத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது வேகத்தை குறைத்து செல்லவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த பகுதிகளில் வனவிலங்குகள் அதிக வாழும் பகுதிகள் என்பதால் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்