கின்னஸ் சாதனை படைத்த 20 மாதக்குழந்தை..!
சில குழந்தைகள் பிறக்கும் பொழுதே அதிக திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.., அப்படி திறமையுடன் பிறந்த குழந்தை தான் மும்பையை சேர்ந்த “சமர்த்தா”.
மும்பை மாட்டுங்கா பகுதியை சேர்ந்த லேபர்லேம்ப் பகுதியில் வசித்து வருபவர்கள் அர்ஜுன் மற்றும் மஹாலக்ஷ்மி தம்பதிகள்.., பிறந்து 20 மாதங்களே ஆன இந்த குழந்தை மலர்கள், பழங்கள் மற்றும் நிறங்களின் பெயர்களை வரிசையாக கூறி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவரின் இந்த சாதனைக்கு பல விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். மேலும் பொது அறிவு போட்டியில் 70 கேள்விகளுக்கு 5 நிமிடத்தில் பதில் அளித்துள்ளார். இதற்கு இன்ஃப்ளூயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டிங் புத்தகத்தில் “யங் மெமரி சாம்பியன்” என்று சாதனை படைத்துள்ளார். உலக சாதனை 2023ல் அவரது பெயர் மற்றும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் தந்தை பெண் குழந்தை பிறந்துள்ளது, என விட்டு சென்றுள்ளார்.
பிறந்த நாளில் இருந்து தாயின் அரவணைப்பில் வளரும் இந்த குட்டி தேவதைக்கு அறிவு திறமை அதிகமாக இருந்துள்ளது. பிறந்த ஏழு மாதத்திலேயே பொருள்களின் பெயர் கேட்டால் அடையாளம் காட்ட ஆரமித்துள்ளார்.
இந்த அறிவை கண்ட தாய்.., குழந்தைக்கு சிறு வயதிலேயே தேசிய கீதம், A – Z, 1,2,3 மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் கற்றுகொடுக்க ஆரமித்துள்ளார்.
இந்த மாதம் நடந்த ஒரு ஆன்லைன் போட்டியிலும் இந்த குழந்தை பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது இந்த குட்டி தேவதைக்கு யங்கெஸ்ட் டேலண்ட் பேபி என்ற விருது கிடைத்துள்ளது என தாய்.. மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்..
மேலும் இதுபோன்ற பல உண்மை தொடர்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.