10 வயது சிறுவனுடன் தகாத உறவு வைத்து கொண்ட 28 வயது இளம்பெண்..! போலீசில் சிக்கியது எப்படி..!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.
பல்லவராயன் பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி (வயது 28) என்பவர் காப்பகத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
3 குழந்தைகளின் தந்தை இறந்ததால் அவர்களது தாய் கைவிடப்பட்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னே இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
அதில் 10 வயது சிறுவன் இந்த காப்பகத்தில் தங்கி சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு அண்மையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிறுவனிடம் விசாரித்தார். அப்போது காப்பக நிர்வாகி முனீஸ்வரி தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அச்சிறுவன் அதிர்ச்சி தகவலை கூறினான்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமியிடம் சிறுவன் நிலை குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் காப்பகத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுக்கு, காப்பக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில் அதிகாரிகள் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகளிர் போலீசார் காப்பக பெண் நிர்வாகி முனீஸ்வரியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவனுக்கு அறங்கேறிய பாலியல் தொல்லை சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-பவானி கார்த்திக்