மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார்….
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, மெரினாவில் 50 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் 100 அடி உயரத்திற்கு பேனா சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிடம் கட்டும் பணி முடிவடைந்து உள்ளது.
அதற்கு முன் உள்ள அண்ணா நினைவிடத்தை புனரமைக்கும் பணி, தடுப்புச்சுவர் கட்டும் பணி, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைப்பெற்றது.
இந்நிலையில், கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.