ராசிபுரம் அருகே 19 கனசதுரங்களை (CUBE SOLVER) 1 மணி நேரத்தில் ஸ்கேட்டிங்கில் விளையாடிக் கொண்டு உலக சாதனை படைத்த சிறுவன்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பரசன்(33), சுகன்யா(31) தம்பதியினருக்கு ஹோசாந்த்(8) என்ற மகன் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.ஹோசாந்த்க்கு சிறுவயது முதலே (ஸ்கேட்டிங்) சறுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்து வந்ததால் வீட்டிலேயே ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
ஸ்கேட்டிங் ஆர்வம் அதிகரிக்கவே உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஸ்கேட்டிங்கில் விளையாடிக் கொண்டு கனசதுரங்களில்(CUBE SOLVER) விளையாடி பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.பயிற்சி மேற்கொண்ட சிறுவன் ஹோசாந்த் 19 கனசதுரங்களை 1 மணி நேரத்தில் செய்து வேர்ல்ட் ரெக்கார்டி ஆன (WORLD WIDE,INDIA WORLD RECORD) உள்ளிடவைக்களில் இடம் பிடித்து சாதனை பெற்றுள்ளார்.
மேலும் செப்டம்பர் மாதம் இறுதியில் கின்னஸ் சாதனையில் பங்கேற்று கண்களை கட்டிக்கொண்டு ஸ்டேட்டிங் விளையாடி சாதனை படைப்பதாக தெரிவித்தார். சாதனை படைத்த சிறுவனுக்கு குடும்பத்தினர், பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்…