திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்த கிரண் குமார் (50) இவருடைய மனைவி துர்கேஸ்வரி வயது (44) தூர்கேஷ்வரியின் தங்கை வெளியூரில் உள்ளார்.மேலும் துர்கேஸ்வரியின் தங்கை அருள்மொழி முருகனுடைய மகள்களான தேவிஸ்ரீ வயது 28 மற்றும் பவித்ரா வயது 18 ஆகிய இருவரும் தனது பெரியம்மாவான துர்கேஸ்வரியின் அரவணைப்பில் ஆதியூர் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சண்முகம் வயது 26 என்பவர் தேவ ஸ்ரீ மற்றும் பவித்ரா ஆகிய இருவர்களிடம் அவ்வப்போது குடிபோதையில் தகராறு ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சில வாரங்களுக்கு முன்பு துர்கேஸ்வரி மற்றும் சண்முகம் ஆகிய இருவருக்கும் இடையே வாய் சண்டை அதிகமாக உள்ளது.
அதனை தொடர்ந்து இன்று வழக்கம் போல் ஆதியூர் பகுதியில் துர்க்கேஸ்வரி வீட்டின் முன்பு அளவுக்கு அதிகமான குடிபோதையில் அமர்ந்திருந்த சண்முகம்.. துர்கேஸ்வரி மற்றும் அவருடைய தங்கை மகள்களான தேவ ஸ்ரீ மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்த பொழுது அளவுக்கு அதிகமான குடிபோதையில் சண்முகம் மீண்டும் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்து மது அருந்துவதை கைவிடுமாறு துர்கேஸ்வரி பலமுறை கூறியும் கண்டுகொள்ளாத சண்முகம் திரும்பவும் அதே போல் அவர்கள் வீட்டு முன்பே மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்கும் பொழுது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு இருவரையும் குத்தச் சென்ற பொழுது
தேவ ஸ்ரீ மற்றும் பவித்ரா ஆகிய இருவரின் நண்பரான இலக்கிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் வல்லரசு என்பவர் தடுக்க சென்று போது சண்முகம் சாரா மாறியாக குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த துர்கேஸ்வரி உடனடியாக திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் வல்லரசுவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தனது வீட்டிற்கு முன்பு மது அருந்தக்கூடாது என கூறியதின் காரணமாக தன்னை கொலை செய்ய முற்பட்டபோது வல்லரசை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.