வயநாடு மீட்பு பணி ராணுவ வீரர்களுக்கு சிறுவன் கடிதம்..! வைரலாகும் கடிதம்..!
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்பு படைகளை மேற்கொண்டுள்ள ராணுவத்தை பாராட்டி கேரளத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் எழுதிய பாராட்டு கடிதம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
300க்கும் மேற்பட்டோரின் உயிழப்புக்கு காரணமான வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோரை இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். இதனை கண்ட கேரளாவில் AMLP பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் ரயான் என்ற சிறுவன் மலையாளத்தில் தனது மழலை மொழியில் எழுதிய கடிதத்தில், அன்புள்ள இந்திய ராணுவத்தினருக்கு, எனது அன்பான வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களது பசியைப் போக்க பிஸ்கட் சாப்பிடும் வீடியோக்களைப் பார்த்தேன்.
அந்த பிஸ்கட் உங்களது பசியைப் போக்கியிருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து இயங்கி உடனடியாக ராணுவ வீரர்கள் பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன் என்று எழுதியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..