நண்பனின் துரோகத்தால் நடுத்தெருவுக்கு வந்த தொழில் அதிபர்…!!
தர்மபுரி அருகே நல்லம்பள்ளியில் உதய குமார் என்பவருக்கு சொந்தமான சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்ச்சாலை இயங்கி வருகிறது. உதயகுமார் சிறு வயது முதலே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பல்வேறு தொழில்கள் செய்து வந்தார்.
இளம் வயது முதலே தொழில் அதிபர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இரவு பகல் அயராது உழைத்து தனது கடின உழைப்பின் மூலம் கர்நாடக தமிழ்நாடு ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சிப்ஸ் கடைகள் வைத்து படிப்படியாக முன்னேறினார்.
மேலும் தனது கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த மொரப்பூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற நண்பன் வறுமையில் வாடி வருவதாகவும் தனக்கும் எதாவது வேலை குடு என கேட்க பரிதாபத்துடன் தன்னுடனே தங்க வைத்து தொழில் கற்று கொடுத்து கடந்த பத்தாண்டுகளாக அவரையும் வாழவைத்து இறுதியில் தனது தொழிற்ச்சாலையிலேே பங்குதாரராக நியமித்து உள்ளார் உதயகுமார்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக தொழிற்ச்சாலையில் கணக்கு வழக்குகள் சரிவர சூர்யா காட்டாமல் மறைத்து வந்துள்ளார்.அது குறித்து கேட்ட உதயகுமாருக்கு சில நாட்களில் கணக்கு காட்டுவதாக கூறி தொழிற்சாலயைின் மேல் பல நபர்களிடம் கடன் பெற்றும் இலாப தொகையும் முதலீட்டு தொகு என சுமார் 1.4 கோடி ரூபாய் சுருட்டிவிட்டு திடீரென தலைமறைவாகிவிட்டார் சூர்யா..
இதனால் கடும் அதிர்சியடைந்த உதயகுமார் செய்வதறியாது திகைத்து தொப்பூர் காவல் நிலைத்திலும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிபாளர் அலுவலகத்திலும் புகார் அளித்ததன் பேரில் புகாரை பதிவு செய்துள்ள போலிசார் தலைமறைவான சூர்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.நண்பனின் நம்பிக்கை துரோகத்தால் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வந்துள்ள உதயகுமார் கண்ணீர் மல்க காவல்துறையிடம் உதவி கேட்டுள்ளார்.
இந்த உதவி கிடைக்காத பட்சத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என உருக்கத்துடன் தெருவித்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..