49 Total Views , 1 Views Today
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு..
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அத்துமீறல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அத்துமீறி நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசியவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கையில் பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.