தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளது.
ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்கில் 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் வாசிக்கப்பட்ட தீர்ப்பில்,
நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது; அதே நேரத்தில் சட்டத்தின் சரத்துகளை கையாள முடியும் தன்பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. 200 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இன்று ஏற்கக் கூடியதாக இருக்கிறது தன் பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம் என மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.