மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை ஆரோக்யமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியை சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்பவர் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதையடுத்து அவருக்கு பிரசவத்தில் நான்கு கால்களை கொண்ட பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழு அந்த குழந்தையை பரிசோதனை செய்தனர். அதில் குழந்தை ஆரோக்யமாக இருப்பதாகவும் குழந்தை 2.4 கிலோ எடை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர் கூறுகையில், குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதால் அந்த குழந்தையை மறுத்தவர் குழு பரிசோதனை செய்தது, இவ்வாறு நடக்கும் நிகழ்வுகளுக்கு மருத்துவத்துறையில் இஸ்கியோபகஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது கரு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும் போது, உடல் பாகங்கள் இரண்டு இடங்களில் வளரும் அதன் காரணமாகவே இந்த குழந்தைக்கு அதன் இடுப்பு பகுதிக்கு கீழ் இரண்டு கால்கள் வளர்ந்துள்ளது என்று கூறினார் மேலும் அவர் கூறுகையில், இந்த கால்கள் செயற்பாட்டில் இருக்காது என்றும் குழந்தையை முழுவதுமாக பரிசோதித்த பின் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அந்த கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற எளிதாக அகற்றபடும் என்று கூறினார். மேலும் குழந்தை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அறுவை சிகிச்சை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.