பிறக்கும் போதே பற்களுடன் பிறந்த குழந்தை… மருத்துவர்கள் கூறுவது என்ன..!
பிறக்கும் குழந்தைகள் பற்கள் இல்லாமல் தான் பிறக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த குழந்தை பற்கள் இல்லாமல் பிறந்து 8 முதல் 9 மாதங்களில் பால்பற்கள் வளர தொடங்கும். பின்னர், அந்த பால்பற்கள் கொட்டிய பிறகு, உண்மையான வலிமையான பற்கள் வளரும்.
இதுதான் பற்கள் வளரும் பொதுவான நிலை. ஒரு வளர்ச்சி அடைந்த முழு மனிதனுக்கு 32 பற்கள் வரை இருக்கும். இது, அவர்களது 21 வயதுக்குள் வளர்ந்துவிடும். இந்தநிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் வசிக்கும் பெண் நிகா திவா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு பிறந்த குழந்தையின் அபூர்வ நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தனது குழந்தைக்கு பிறக்கும்போதே, 32 பற்களும் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இந்த வீடியோவை வெளியிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும், அதிர்ச்சியுடனும், கவலையுடனும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், இதுகுறித்து பேசியுள்ள சில மருத்துவர்கள், அந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ள மருத்துவ பிரச்சனை குறித்து பேசியுள்ளனர்.
அதாவது, Natal Teeth என்ற மருத்துவ நிலை தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பிறக்கும் போதே பற்கள் இருப்பது, குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூற்யுள்ளனர்.
-பவானி கார்த்திக்