ஆண் பெண் என இரு பிறப்பு உறுப்புடன் பிறந்த குழந்தை..!! மறைத்த மருத்துவமனை..!!
சென்னையில் உள்ள தனியார் SUKIRITI மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஒரு தம்பதி 5 வது மாதத்தில் இருந்து கர்ப்பக்கால பரிசோதனைகள் செய்துள்ளார். அதில் குழந்தை நலமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய அனைத்து ஸ்கேன் களும் எடுத்துள்ளனர்.., தாயும் சேயும் நலமாக இருக்கின்றார்கள். எந்த வித பிரச்னையும் இல்லை.., மருந்து மாத்திரைகள் எடுத்து கொண்டாலே போதும் எனவும் தனியார் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசவ காலம் நெருங்கியதும் அருகிலும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். குழந்தையும் பிறந்துள்ளது ஆனால் அதில் தான் பல உண்மைகளும் வெளிவந்தது.., குழந்தைக்கு இரண்டு பிறப்புறுப்பு இருந்துள்ளது, அது மட்டுமின்றி குழந்தைக்கு இதயம் பலவீனமாகவும், இருந்துள்ளது, குழந்தைக்கு பிறப்புறுப்பில் இருந்தும் ரத்தம் கசிந்த படியே இருந்துள்ளது.
இதுகுறித்து எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவர்கள் கூறியது.., 4வது மாதம் ஸ்கேன் செய்யும் பொழுது குழந்தைகளுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கின்றது என தெரிந்துவிடும். இது குறித்து நீங்கள் கர்ப்பகாலத்தில் பார்த்த மருத்துவரே சொல்லியிருப்பாரே என தாயிடம் கேட்டதற்கு அவர்கள் முதலில் எடுத்த ஸ்கேன் முதல் கடைசியாக ஸ்கேன் ரிப்போர்ட் வரை அனைத்தையும் காணிப்பித்துள்ளனர்.
அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தை குறித்தும் எதுவும் இல்லை.., குழந்தையின் தாயிடமும் இதுகுறித்து கூறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.., இது பற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்ட பொழுது, விளக்கம் எதுவும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தற்போது அந்த தனியார் மருத்துவமனை ,முன் பிறந்த குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர்.
இப்படி சரியான முறையில்லா மருத்துவமனையால்.., ஒரு குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது. இந்த சம்பவம் பலரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.