தூளியில் விளையாடிய குழந்தை கழுத்து இறுக்கி பலி..! சென்னை கொருக்குப்பேட்டையில் பரபரப்பு…!
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் வீட்டு வசதி வாரிய குடியுருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயது மகன் மற்றும் 6மாத குழந்தை உள்ளனர்.
இதில் 12 வயது சிறுவன் திவாகர்.இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாபு தனது 6 மாத குழந்தைக்கு வீட்டில் புடவையால் தொட்டில் கட்டி உள்ளார்.
அந்த தொட்டிலில் சிறுவன் திவாகர் தினமும் விளையாடுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 10ம் தேதி வழக்கம் போல் தொட்டிலில் ஆடிக் கொண்டிருந்த போது, வீட்டின் வெளியே பெற்றோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
சிறுவன் திவாகர் விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் புடவை எதிர்பாராதவிதமாக திவாகர் கழுத்தில் இறுக்கமாகச் சுற்றப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் சிறுவன் தவித்த நிலையில் மூச்சுத் திணறி இறந்துள்ளான்.
பின்னர் சிறிது நேரம் கழித்து பெற்றோர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் சிறுவன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே பெற்றோர் சிறுவனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்