யார்கிட்டையும் பேசாம இருந்த ஒரு நாள் உங்கள் வாழ்க்கை…!! குட்டிஸ்டோரி-29
ஒரு குட்டி பையன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான், அவனுக்கு அப்பா அம்மா இல்லாமல் தனியாக பாட்டியின் வீட்டில் இருந்து படிக்கிறான். அவனுக்கு பள்ளிக்கூடத்தில் அதிக நண்பர்கள் இல்லாமல் இருப்பதால் அவனுக்கு பள்ளிக்கூடம் போக விருப்பம் இல்லாமல் வாழ்ந்து வந்தான்.
அதன் பின் அவனே பாட்டி கஷ்டப்பட்டு நம்மளை படிக்க வைக்குறாங்க, இனிமே நல்லா படிக்கணும் அப்படினு அவனே மனதை பக்குவப்படுத்திகிட்டு பள்ளிக்கூடம் கிளம்புவதற்கு தயாராகி போயிடுவான்..
பள்ளிக்கூடம் போனால் மத்த குழந்தைகள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருப்பார்கள், அனால் இவன் மட்டும் தனியாக ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பான்.
இதை பார்த்த தமிழ் ஆசிரியர் இரண்டு நாள்களாக இப்படி நடக்கிறது என எண்ணியபடியே அந்த குட்டி பையன்னை கூப்பிட்டு நீ ஏன் விளையாடப்போகவில்லை என்று கேட்க, அவன் அதற்கு யாரும் என்கூட விளையாட வரமாட்டுக்காங்க ஐயா அதனால தான் நான் தனியாக இருக்கிறேன் என கூறியுள்ளான்.
அதற்கு அந்த ஆசிரியர், நீ கவலைப்படாத நன்றாக படித்து ஒரு நல்ல வேலைக்கு போ, எல்லாரும் உன்கூட பேசுறதுக்கு காத்துட்டு இருப்பாங்க என்று கூறியுள்ளார். அவனும் அதை மனதில் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.
சில வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டில் படித்து விட்டு அங்கயே ஒரு பெரிய கம்பெனியில வேலை பார்த்து கொண்டிருந்தான், திருவிழாவிற்காக ஊருக்கு வந்த போது அனைவரும் இவனை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது யாரு பேசினாலும் பேசவில்லை என்றாலும் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அதற்கான பலன் ஒருநாள் நம்மை வந்து சேரும் .
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..