காலை உணவுக்கு இன்னிக்கு சின்ன வெங்காய தொக்கு செய்ங்க…!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ
மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1 டீஸ்பூன்
வெல்லம் – 2 ஸ்பூன்
புளிக்கரைசல் – 1 கப்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு- தேவைக்கு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு – தாளிக்க
பெருங்காயம் ஒரு டீஸ்பூன்
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரித்து கருவேப்பிலை போட்டு பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக சுண்டியதும் அதில் உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பின் சிறிது பெருங்காயத்தூளை சேர்த்து கிளறி இறக்கவும்
அவ்ளோதான் சுவையான சின்ன வெங்காய தொக்கு தயார். இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.