தோட்டக்கலை பிரியரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்..!
விவசாயத்தில் முக்கியமான ஒரு அங்கமாக தோட்டக்கலை பயிர்கள் இருக்கிறது. இன்றைய காலத்தில் நகர்புறங்களில் பலரும் மாடித்தோட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பயனுள்ள சில குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
- உங்களின் சுற்றுபுறத்தில் இருக்கும் மண்ணின் தன்மையை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் மண்ணிற்கு எந்த தாவரங்கள் செழித்து வளர்கிறது மற்றும் வளராத தாவரங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். எந்த காலத்தில் கீரைகள் மற்றும் பழங்கள் நன்றாக வளரும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- உங்களின் மண்ணிற்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்கிய மற்றும் அழுகிய உரங்களை போட வேண்டும். புதிய உரங்களில் நோய் கிருமிகள் இருக்கும் எனவே இவை தாவரங்களை பாதிக்கும். தாவரங்களுக்கு பூனை, நாய் மற்றும் பன்றி எருக்குகளை பயன்படுத்தவே கூடாது.
- செடிகளில் எப்போது கவாத்து செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பூக்கள் பூப்பதற்கு முன்பு கவாத்து செய்துவிட்டால் செடி நன்றாக வளரும். வாடிய கிளைகள் மற்றும் இலைகளை முதலில் அகற்ற வேண்டும். பூக்கள் பூக்கும் சமையத்தில் கவாத்து செய்ய நினைத்தால் மொட்டுக்களில் பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து செய்ய வேண்டும்.
- பொதுவாக ஒருசில தாவரங்கள் அறுவடைக்கு தயாராகாமலும் வாடி போகாமலும் இருக்கலாம். அதுபோல தாவரங்கள் முதிர்ச்சியடைய மூன்று ஆண்டுகள் ஆகலாம். அதனால் அவசரப்பட்டு வளர்ச்சியே இல்லை என நினைத்துவிடக் கூடாது. பொறுமை காக்க வேண்டும். தாவரங்களுக்கு காலையில் தண்ணீர் ஊற்றுவது நல்லது. அப்போது தான் ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும்.
- நீங்கள் பயிரிடும் தாவரங்கள் வளரும் தன்மை, அதன் தன்மையை பற்றி அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தோட்டத்தில் பயிரிடும் தாவரங்கள் பெரும்பாலும் குறுகிய காலம் மட்டுமே தேவைப்படும். அந்த சமையத்தில் தாவரங்கள் ஈரப்பதமாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.