மலசிக்கல் பிரச்சனைக்கு ஒரு குட் பாய்..!! இந்த ரகசியம் கேளுங்க
மனிதனுக்கு இருக்கும் பல சிக்கல்களில் மலசிக்கல் தான் பெரும் சிக்கலாக இருக்கிறது. குடல் இயக்க கோளாறு காரணமாக இது ஏற்படுகிறது. மலம் கழிக்கும் பொழுது சிரமம் ஏற்பட்டால், அது நாளடைவில் பெரும் நோயாக மாறிவிடுகிறது. சரியான உணவு முறைகளை எடுத்துக் கொண்டால் இவற்றை சரி செய்து விடலாம்.
ஓட்ஸ் : இதில் நார்ச்சத்துகள் நிறைந்து இருக்கும். இதை காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் இவை குடல் வழியாக செல்வதற்கு எளிதாக இருக்கும். இதனால் மலம் கழிக்கவும் சிரமம் ஏற்படாது.
பச்சை காய்கறிகள் : பல உடல் நோய் களுக்கு பச்சை காய்கறிகள் உடலை சரி செய்ய உதவுகிறது. புரோக்கோலி, கீரைகள், ஃபைபர் அதிகம் இருப்பதால் மலம் கழிப்பதை எளிதாக்கி விடுகிறது.
பழங்கள் : கிவி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் போன்றவை செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். தினமும் இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் காலை மலம் கழிப்பதற்கு உதவியாக இருக்கும்.
பீன்ஸ் : பீன்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால், வெவ்வேறு வழிகளில் மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது, மேலும் இது மலமிளக்கியாக செயல்படும் எதிர்ப்பு சக்தி கொண்ட மாவுச்சத்தை கொண்டுள்ளது.
குடல் ஆரோக்கியம் : புரோபயாடிக்ஸ் இயற்கையாகவே புளித்த உணவுகளை எடுத்துக்கொண்டால், குடல் நுண்ணுயிரியை மேம்படுத்தி மலசிக்கல் போன்ற செரிமான பிரச்சனையை தீர்க்கிறது.
தண்ணீர் : உடலே என்றும் நீரேற்றத்துடன் வைத்திருப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற சிறந்தது. சரியான செரிமான அமைப்பு இல்லை என்றால் மட்டுமே மலசிக்கல் பிரச்சனை ஏற்படும்.
தினமும் 8 முதல் 10 டம்பளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி