இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் பலி…
அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வெங்கட்ரமணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் இரவு 8 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் அரியலூர்-பெரம்பலூர் புறவழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாடை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அசோக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துன்ரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.