டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்..!!
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டது. அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் நிறைவேற்றியது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார்.
இந்நிலையில், யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, திருச்சி நாடளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதீப் பந்தோ பாத்யாயா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் மனோஜ் குமார்ஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், புரட்சிகர சோஷிய லிஸ்ட்டின் பிரேம சந்திரன், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சுப்பராயன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..